சென்னையில் திடீர் கனமழை: அண்ணாநகரில் 1 மணி நேரத்தில் 10 செ.மீ. மழை!
சென்னை அண்ணாநகர், வில்லிவாக்கம், பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 1 மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது.
சென்னை : நேற்று வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், சென்னையில் கனமழை எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. இந்த நிலையில், திடீரென சென்னையில் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.
ஆம், இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், பகல் 12 மணியளவில் மழை பெய்ய தொடங்கியது. அதன்படி, அண்ணாநகர், வில்லிவாக்கம், பாடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 1 மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், கிழக்கு திசையில் இருந்து வந்த மேகங்கள் காரணமாக மழை பெய்து வருகிறது. இதனால், அண்ணாநகர், தியாகராய நகர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 1 மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது.
இதில், அண்ணாநகரில் ஒரு மணி நேரத்தில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Anna Nagar West pounded with 100 mm rains in less than 1 hour. Kolathur, Ambattur, Korattur, Mogappair, Padi, Valasarwakkam too got heavy rains in short span.
Intense cloud right over Anna Nagar belt. pic.twitter.com/QRKObdtpbZ
— Tamil Nadu Weatherman (@praddy06) October 30, 2024
தற்பொழுது, தியாகராயர் நகரில் திடீரென கொட்டிய மழையால் சாலையில் பாய்ந்தோடிய மழைநீர் ஓடுகிறது.
சென்னையில் மழை தொடரும்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் எனவும், சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.