வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு மண்டலம் – வானிலை ஆய்வு மையம்!

சென்னை: தாழ்வு மண்டலமாக மாறியது வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.
மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக் கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. பின்னர், இது வடக்கு நோக்கி நகர்ந்து, நாளை மாலைக்குள் தீவிர புயலாக வலுப்பெறும். உருவாகவுள்ள தீவிர புயலுக்கு “REMAL” என்று பெயரிடப்பட்டுள்ளது.
பின்னர், 26ம் தேதி நள்ளிரவில் சாகர் தீவு மற்றும் கெபுபாரா இடையே வங்காளதேசம் மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்கக் கடற்கரையில் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, வருகிற 26ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல், தமிழகத்தில் நாளை முதல் 28தேதி வரை தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, குமரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.