தீவிரமான ‘டானா’ புயல் நாளை எங்கு கரையைக் கடக்கிறது.?
இந்த தீவிர புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிசாவின் பூரி மற்றும் சாகர் தீவுகளுக்கு இடையே கடக்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஒடிசா : மத்திய வடமேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த “டானா” புயல், தீவிர புயலாக வலுப்பெற்றது. அந்தப் புயல் தற்போது ஒடிசாவின் பாரதீப்பில் இருந்து 280 கி.மீ., மேற்கு வங்கத்தின் சாகர் தீவில் இருந்து 370 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று நள்ளிரவு முதல் நாளை (அக்.25) காலை வரையிலான நேரத்தில் ஒடிசா, மேற்குவங்கம் இடையே ஒடிசா – மேற்குவங்கம் (பூரி மற்றும் சாகர் தீவு) இடையே தீவிர புயலாக அதாவது 110 கி.மீ. முதல் 120 கி.மீ. வேகத்துடன் கூடிய காற்றுடன் கரையைக்கடக்கும் என்றும் கணித்துள்ளது.
இந்நிலையில், ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களில் பலத்தமழை பெய்ய கூடும். இதனால், அம்மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தயார் நிலையில் மீட்புப் படை நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
டானா புயல் எதிரொலியாக ஒடிசா மாநிலம், புவனேஸ்வர் விமான நிலையம் 16 மணி நேரத்திற்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்பதால், கிழக்கு கடலோர வழித்தடத்தில் 197 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.