அடுத்த 24 மணி நேரத்தில் சௌராஷ்டிரா, கட்ச்சில் கனமழை பெய்யும்..! ஐஎம்டி தலைவர் சுனில் காம்ப்ளே
அடுத்த 24 மணி நேரத்தில் சௌராஷ்டிரா, கட்ச்சில் கனமழை பெய்யும் என ஐஎம்டி தலைவர் சுனில் காம்ப்ளே தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் அரபிக்கடல் பகுதிகளில் ஏற்பட்ட பிபார்ஜாய் புயல் இன்று அரபிக்கடலில் இருந்து நகர்ந்து, சௌராஷ்டிரா-கட்ச் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பாகிஸ்தான் கடற்கரை பகுதியில் நாளை மிக தீவிர புயலாக மாறி, குஜராத்தில் உள்ள ஜக்காவ் துறைமுகத்தை, 150 கிமீ வேகத்தில் கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், பிபார்ஜாய் புயல் தற்போது மும்பையில் இருந்து விலகி உள்ளது எனவும், நாளை மாண்ட்வி மற்றும் கராச்சி இடையே இந்த புயல் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் சுனில் காம்ப்ளே தெரிவித்துள்ளார்.
மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் சௌராஷ்டிரா, கட்ச்சில் கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், இந்திய வானிலை ஆய்வு மையம் சௌராஷ்டிரா மற்றும் கட்ச் கடற்கரை பகுதிகளுக்கு சூறாவளி எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#WATCH | Cyclone #Biparjoy is currently away from Mumbai. #Biparjoy is likely to make landfall between Mandvi and Karachi on 15th June. Heavy rains to occur in Kachchh, Saurashtra in next 24 hours: Sunil Kamble, IMD chief, Mumbai pic.twitter.com/ONnZhTPeFQ
— ANI (@ANI) June 14, 2023