அடுத்த 2 மணி நேரத்திற்கு ரெட் அலர்ட் முதல் மிதமான மழை வரை! எங்கெல்லாம் தெரியுமா?
தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு பல்வேறு மாவட்டங்களுக்கான ரெட் அலர்ட் முதல் மிதமான மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை : ஃபெஞ்சல் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு (மாலை 6 மணி வரை) பல்வேறு மாவட்டங்களுக்கான சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் முதல் மிதமான மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கீழே அதற்கான பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் உங்கள் பகுதி இருக்கிறதா? என பார்த்து கொள்ளுங்கள்…
ரெட் அலர்ட்
திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக கனமழை முதல் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்ச் அலர்ட்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தர்மபுரி, சேலம், நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி , காரைக்காலில் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது
மஞ்சள் அலர்ட்
வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், திண்டுக்கல், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் மதுரை ஆகிய 15 மாவட்டங்களில் மிதமான மழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) December 1, 2024