இங்கிலாந்தில் சிவப்பு வெப்ப எச்சரிக்கை விடுக்கும் நிலையில் வரலாறு காணாத வெப்பம் !
இங்கிலாந்தில் வெப்பநிலை அதிகரித்து வருவதால் பிரிட்டனில் இதுவரை இல்லாத அளவுக்கு 40 டிகிரி செல்சியஸ் பதிவானது.ரயில் செல்லும் பாதைகளில் தீப்பிடித்து, சில விமான சேவைகளில் பாதிப்புகள் ஏற்பட்டன. தீவிர சிவப்புவெப்ப எச்சரிக்கை காரணமாக மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் அல்லது தேவைப்பட்டால் மட்டுமே பயணிக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இங்கிலாந்தில் தீவிர சிவப்பு வெப்ப எச்சரிக்கை இருப்பதால் ரயில்கள் பெரும்பாலும் 90 மைல் வேகத்தில் 100 மைல் அல்லது 125 மைல் வேகத்தில் மட்டுமே இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் சில ரயில்கள் 20 மைல் வேகத்தில் மெதுவாக செல்வும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெப்பத்தை சமாளிக்க பாதுகாப்பு கட்டுப்பாடுகள் காரணமாக லண்டனின் ரயில் நெட்வொர்க் இன்று முழுவதும் குறைவான சேவையை இயக்கப்பட்டது.மேலும் கேட்விக் எக்ஸ்பிரஸ் ரயில்கள் முற்றிலும் நிறுத்தப்பட்டன.
நேரடி சூரிய ஒளியில் தண்டவாளங்கள் இருப்பதால் அதன் வெப்பநிலை காற்றின் வெப்பநிலையை விட 20 டிகிரி செல்சியஸ் (36 ° F) அதிகமாக இருக்கும். தண்டவாளங்கள் எஃகு மூலம் தயாரிக்கப்படுவதால், அவை சூடாகும்போது விரிவடைகின்றன. மேலும் அவை வளைய தொடங்கும். இது ‘பக்லிங்’ என்று அழைக்கப்படுகிறது. இதனால் பல இடங்களில் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
நேற்று, இங்கிலாந்தின் மிகப்பெரிய விமான நிலையங்களில் ஒன்று லூடன் விமான நிலையம், இங்கு அதிக வெப்பநிலை ஒரு ஓடுபாதையை சேதப்படுத்தியதால் விமானங்களை நிறுத்தப்பட்டது. பொறியாளர்கள் ஓடுபாதையில் ‘மேற்பரப்பு குறைபாட்டை’ கண்டறிந்து பழுதுபார்ப்பதற்காக விமான நிலையத்தை மூடினர். பின்னர் மாலை மீண்டும் வழக்கம்போல் இயக்கப்பட்டது.
தென்மேற்கு பிரான்சின் ஜிரோண்டே பகுதியில், உலர்ந்த பைன் காடுகளில் ஒரு வாரமாக இரண்டு பெரிய காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. இதனால் 32,000 மக்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் உள்ளது. இதில்19,000 ஹெக்டேர் (46,000 ஏக்கர்) காடுகள் அழிந்தன. நீர்குண்டு வீசும் விமானங்கள் பயன்படுத்தப்பட்ட போதிலும், பலத்த காற்று மற்றும் வெப்பம் தீயை விசிறி வருவதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
லண்டனில் உள்ள பயணிகள் “அத்தியாவசிய பயணங்களுக்கு” தவிர நகரத்தின் போக்குவரத்து வலையமைப்பைப் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வெப்பத் தாக்கம் மற்றும் வெப்பம் தொடர்பான நோயின் அறிகுறிகள் குறித்தும் மக்கள் கவனத்துடன் இருக்குமாறு மருத்துவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Momentos de pánico en el tren Madrid-Ferrol a la altura de Zamora-Sanabria, 9:30hs. El tren continuó el trayecto tras unos minutos parado. @renfe @adif @lavozdegalicia pic.twitter.com/YXcuBXlIJQ
— Francisco Seoane Pérez (@PacoSeoanePerez) July 18, 2022