தூத்துக்குடி,சென்னை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் மழை தொடரும்! வானிலை மையம் எச்சரிக்கை!
திருவாரூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரம், உட்பட மொத்தம் 19 மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.

சென்னை : தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. உதாரணமாக தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை காலையில் இருந்தே பெய்து வருகிறது. இந்த சூழலில், 19 மாவட்டங்களில் மழை இன்று தொடர்ச்சியாக பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.
அதன்படி, இன்று பகல் 1 மணி வரை திருவாரூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், சென்னை மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் தொடர்ச்சியாக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், .இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விருதுநகர், சிவகங்கை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.