குடை முக்கியம் மக்களே!! அடுத்த 3 மணி நேரத்திற்கு குமரி மற்றும் நெல்லையில் மழை பெய்யும்.!
இன்று காலை 10 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்ற தகவலை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.
நெல்லை : பருவமழையானது தென்மாவட்டங்களை நோக்கி படையெடுக்க துவங்கியுள்ளது. நேற்றைய தினம் 13 தென் மாவட்டங்களிலும் இன்றைய தினம் 9 மாவட்டங்களிலும் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதனிடையே, இன்று காலை 4 மணி வரை மழை கொட்டும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தென் மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்தது.
தற்பொழுது, அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்ற தகவலை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய 2 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களில் வேளைக்குச் செல்வோர் குடை எடுத்துச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) October 26, 2024