13 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை.!

சென்னை: அடுத்த 2 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு (மதியம் 1 மணி வரை) மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக 8 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. மேலும், பொள்ளாச்சி மற்றும் தூத்துக்குடியில் தலா 7 செ.மீ., மழைப் பொழிவு பதிவாகியுள்ளன.
இதனிடையே, அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்தரி வெயில் தாக்கம் கடுமையாக இருக்கும் வேலையில், கடந்த ஒரு வார காலமாக பல்வேரு மாவட்டங்களில் கனமழை மற்றும் மதமான மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து பொது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
சினிமாவுக்குள் சினிமா.., காமெடி, திரில்லர்., கலந்து கட்டி அடிக்கும் DD Next Level டிரெய்லர் இதோ…
April 30, 2025
“சென்னை சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்!” தேமுதிக கூட்டத்தில் முக்கிய தீர்மானம்.!
April 30, 2025
தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!
April 30, 2025
கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் உயிரிழப்பு.!
April 30, 2025
“தவெக தொண்டர்களின் செயல் கவலை அளிக்கிறது!” விஜய் வேதனை!
April 30, 2025