நாளை எந்தெந்த மாவட்டங்களுக்கு மழை அலர்ட்? முழு விவரம் இதோ!!
நாளை திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு , காஞ்சிபுரம் மாவட்டங்களில் அதி கனமழைகான ரெட் அலர்ட் கொடுத்து வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னை : தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், நாளை அக் 16 தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை, அதித கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி,…
ரெட் அலர்ட் ( அதி கனமழை)
- திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு , காஞ்சிபுரம்
மஞ்சள் அலர்ட் (கனமழை)
- கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், திருச்சிராப்பள்ளி புதுக்கோட்டை
ஆரஞ்சு அலர்ட் (மிக கனமழை )
- இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர். மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை நிலவரம்
அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன அல்லது மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.