சென்னையில் நேற்று போல் இன்று (நவ.27) மழை இருக்காது – பிரதீப் ஜான் கணிப்பு!
சென்னையில் நேற்று போல் இன்று (நவ.27) மழை இருக்காது என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
சென்னை : வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 5:30 மணி நிலவரப்படி புயல் சின்னம் நாகப்பட்டினத்திற்கு தெற்கே-தென்கிழக்கே 420 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தெற்கே-தென்கிழகே 530 கிமீ தொலைவிலும் மத்திய இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலில் நிலவிவருகிறது.
இந்த நிலையில், சென்னையில் நேற்று போல் இன்று (நவ.27) மழை இருக்காது என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில்,”ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சற்று கிழக்கு திசையில் நகர்ந்து வடக்கு நோக்கி நகர்கிறது.
அது மேற்கு நோக்கி நகரும் போதுதான் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று கூறியுள்ளார். மேலும், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர் மற்றும் காரைக்காலில் இன்று காலை முதல் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. தஞ்சாவூர், திருச்சி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், விழுப்புரத்திலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக” அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Morning snippet update – Nagai, Mayil, Karaikkal, Tiruvarur and Cuddalore will be the hotspot districts today.
Nearby districts such as Thanjavur, Trichy, Ramanathapuram, Pudukottai, Perambalur, Ariyalur, Villupuram, Pondy will also get rains.
Refer yesterday night tweet, the…
— Tamil Nadu Weatherman (@praddy06) November 27, 2024