மக்களே எச்சரிக்கை..! இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..!
இன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
தமிழகத்தில் பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலூர், மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட பகுதிகளில் அதி கனமழை பெய்துள்ளது.
இந்த நிலையில், இன்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாடு கடலோர பகுதிகளில் வரும் 19-ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 19ம் தேதி முதல் மழையின் தீவிரம் படிப்படியாக குறையும் என்றும், தெற்கு அந்தமான் பகுதி, அதனையொட்டியுள்ள தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.