ஓகி புயலின் தாக்கத்திலிருந்து மீண்டு வந்திருக்கும்தேன் தமிழகத்தில் தற்போது மீண்டும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உண்டாகி இருப்பதால், அடுத்து இரண்டு நாட்களுக்கு தென்தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மற்றும் நாகர்கோயிலில் 3.செ.மீ மழை பெய்துள்ளது.
வங்க கடலில் நிலை கொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
வங்க கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு.சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; மழைக்கு வாய்ப்பு இல்லை – வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியவை, ‘நேற்று(டிசம்பர் 3) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்றும் (டிசம்பர் 4) அதே பகுதியில் நீடிக்கிறது. இதனால், அடுத்த 24 மணி நேரத்தில் அது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். டிசம்பர் 6-ந் தேதி வரையிலான காலக்கட்டத்தில், அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கரையை […]
தமிழகத்தில் ஓகி புயல் காரணமாக தென் தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஓகி புயல் வலுவிழந்து அரபிக்கடலில் மையம் கொண்டுள்ளது. ஓகி புயல் காரணமாக அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசத்தில் 45 செமீ மழை பெய்துள்ளது. மேலும் தென்தமிழக கடல் மற்றும் குமரி கடலில் கடல் சீற்றத்துடன் காணப்படும். சென்னையில் மழை விட்டுவிட்டு பெய்யும், தேனி, நீலகிரியில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பரவலாகக பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக மழை நின்று வெயில் அடிக்க தொடங்கிவிட்டது. ஆனாலும் ஒரு சில தென்மாவட்டங்களில் கொஞ்சம் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அந்தமான் கடல் பகுதியில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிவிட்டது. இது அந்தப் பகுதி முழுவதும் பரவி மேலடுக்கு சுழற்சியாக உருவெடுத்து உள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு மற்றும் தென்மேற்கு […]
வடகிழக்கு பருமழை ஏற்கனவே கொட்டி தீர்த்தது போதாமல் அடுத்த வாரம் இந்த மழை இன்னும் தீவிரமடையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ‘வேப்பசலனம் காரணமாக வட, தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் எனவும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் மழைக்கு வாய்ப்புள்ளது.’ இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.