கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பரவலாகக பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக மழை நின்று வெயில் அடிக்க தொடங்கிவிட்டது. ஆனாலும் ஒரு சில தென்மாவட்டங்களில் கொஞ்சம் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அந்தமான் கடல் பகுதியில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிவிட்டது. இது அந்தப் பகுதி முழுவதும் பரவி மேலடுக்கு சுழற்சியாக உருவெடுத்து உள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு மற்றும் தென்மேற்கு […]
வடகிழக்கு பருமழை ஏற்கனவே கொட்டி தீர்த்தது போதாமல் அடுத்த வாரம் இந்த மழை இன்னும் தீவிரமடையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ‘வேப்பசலனம் காரணமாக வட, தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் எனவும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் மழைக்கு வாய்ப்புள்ளது.’ இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.