நாகை மாவட்டம் மயிலாடுதுறை, தரங்கம்பாடி ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு முதலும், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் அதிகாலை முதல் மிதமான மழை பெய்தது.அதேபோல் தூத்துக்குடி உட்பட கடற்கரையோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.இன்று விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை மிதமான மழை பெய்து வருகிறது. இதேபோன்று கடலூர் மாவட்டத்தில் கடலூர் , காட்டுமன்னார் கோவில், குமராட்சி, லால்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. சென்னையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அதேபோல் தூத்துக்குடியில் லேசான தூரல் மழை பெய்தது.
இன்று கடலோர மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது என நேற்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனை தொடர்ந்து இன்று விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை மிதமான மழை பெய்து வருகிறது. இதேபோன்று கடலூர் மாவட்டத்தில் கடலூர் , காட்டுமன்னார் கோவில், குமராட்சி, லால்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. சென்னையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அதேபோல் தூத்துக்குடியில் லேசான தூரல் மழை பெய்தது.
தென் மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த பகுதி நிலவுகிறது. இது மேற்கு நோக்கி நகர்வதால் அடுத்து வரும் இரண்டு நாட்களில் தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மற்றும் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்தார். அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் 45 முதல் 55 கிலோ […]
தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக 9ஆம் தேதி முதல் மூன்று நாட்களுக்குத் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளது. source: dinasuvadu.com
வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்.. source: dinasuvadu.com
சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறுகையில், இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும், சென்னை மற்றும் புறநகர்களில் வானம் மேக மூட்டமாக காணப்படும் என்றும் தெரிவித்தார். கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், ஆனைக்காரன் சத்திரம், முத்துப்பேட்டை, மதுக்கூர், பட்டுக்கோட்டை, நன்னிலம், பரங்கிப்பேட்டை, பாபநாசம் தலா 2 செ.மீ., அதிராம்பட்டினம், நாகப்பட்டினம், மன்னார்குடி, நீடாமங்கலம், காரைக்கால், பாண்டவராயர் தலை, குடவாசல், புதுக் கோட்டை, பேராவூரணி, […]
இன்று டிசம்பர் 21ம் நாள் “Winter Solstice ” என்று சொல்லப்படும் குளிர்கால சங்கராந்தி அல்லது மகராயனம் நிகழும் நாள் ஆகும். பூமி சூரியனை சுற்றிவர ஒரு வருடம் எடுத்துக் கொள்கிறது என அறிவோம். அப்படி வரும்போது சூரியன் பூமத்திய ரேகையை விட்டு வெகு தொலைவை அதாவது கடைக் கோடியை அடையும் நாள் இதுவாகும். இன்றையதினம் பூமத்திய ரேகைக்கு வடக்கில் உள்ள அனைத்து பகுதிக்கும் நீண்ட இரவும் மிகக் குறுகிய பகலும் நிலவும். வடதுருவத்தில் முற்றிலும் இரவு […]
தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்தது. ராமநாதபுரம் மாவட்டத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் மாநகரம், முத்தையாபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்தது.நெல்லை மாவட்டம் தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது.
ஓகி புயலின் தாக்கத்திலிருந்து மீண்டு வந்திருக்கும்தேன் தமிழகத்தில் தற்போது மீண்டும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உண்டாகி இருப்பதால், அடுத்து இரண்டு நாட்களுக்கு தென்தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி மற்றும் நாகர்கோயிலில் 3.செ.மீ மழை பெய்துள்ளது.
வங்க கடலில் நிலை கொண்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்
வங்க கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சியால் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு.சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்; மழைக்கு வாய்ப்பு இல்லை – வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியவை, ‘நேற்று(டிசம்பர் 3) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வலுவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்றும் (டிசம்பர் 4) அதே பகுதியில் நீடிக்கிறது. இதனால், அடுத்த 24 மணி நேரத்தில் அது, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும். டிசம்பர் 6-ந் தேதி வரையிலான காலக்கட்டத்தில், அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கரையை […]
தமிழகத்தில் ஓகி புயல் காரணமாக தென் தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஓகி புயல் வலுவிழந்து அரபிக்கடலில் மையம் கொண்டுள்ளது. ஓகி புயல் காரணமாக அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசத்தில் 45 செமீ மழை பெய்துள்ளது. மேலும் தென்தமிழக கடல் மற்றும் குமரி கடலில் கடல் சீற்றத்துடன் காணப்படும். சென்னையில் மழை விட்டுவிட்டு பெய்யும், தேனி, நீலகிரியில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் பரவலாகக பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக மழை நின்று வெயில் அடிக்க தொடங்கிவிட்டது. ஆனாலும் ஒரு சில தென்மாவட்டங்களில் கொஞ்சம் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அந்தமான் கடல் பகுதியில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிவிட்டது. இது அந்தப் பகுதி முழுவதும் பரவி மேலடுக்கு சுழற்சியாக உருவெடுத்து உள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு மற்றும் தென்மேற்கு […]
வடகிழக்கு பருமழை ஏற்கனவே கொட்டி தீர்த்தது போதாமல் அடுத்த வாரம் இந்த மழை இன்னும் தீவிரமடையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், ‘வேப்பசலனம் காரணமாக வட, தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் எனவும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவில் மழைக்கு வாய்ப்புள்ளது.’ இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.