வானிலை

வங்க கடலில் புயல் சின்னம்.!புதுவை துறைமுகத்தில் 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

வங்க கடல் பகுதியில் திடீர் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வங்க கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவுகிறது. இதனை எச்சரிக்கையாக அறிவிக்கும் பொருட்டு புதுவை துறைமுகத்தில் தூர புயல் முன்னறிவிப்பு கொடி எண். 1 ஏற்றப்பட்டுள்ளது. இதனால் தமிழகம், புதுவையில் நேரடியாக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை. இருப்பினும், கடலோர பகுதிகளில் காற்று சற்று அதிகமாக வீசக்கூடும். கடல் சற்று சீற்றமாக காணப்படும். புதுவையில் மீன்பிடி தடைக்காலம் வருகிற 15-ந் […]

வங்க கடலில் புயல் சின்னம்.!புதுவை துறைமுகத்தில் 1-ம் எண் எச்சரிக்கை கூண்டு 2 Min Read
Default Image

மழை எதிரொலி: பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 11 அடி உயர்வு..!

நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை களக்காடு மலைப்பகுதியில் உள்ள கொடுமுடியாறு அணைபகுதியில் நேற்று அதிகபட்சமாக 17 சென்டி மீட்டர் மழை பெய்தது. அப்பகுதியில் இன்று காலை வரை 10 செ.மீ. மழை பெய்துள்ளது. பாபநாசம் அணைப்பகுதியில் இன்று காலை வரை 12 சென்டி மீட்டரும், சேர்வலாறு அணை பகுதியில் 5 செ.மீ. மழையும், கருப்பாநதி யில் 8 செ.மீ. மழையும், குண்டாறில் 5 செ.மீ. மழையும் பெய்துள்ளது. மழை காரணமாக அனைத்து அணைகளுக்கும் தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணைகளின் […]

கனமழை 7 Min Read
Default Image

தனுஷ்கோடியில் புயல் எச்சரிக்கை ! 70 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று.! சுற்றுலா பயணிகளுக்கு தடை..!

தென்மேற்கு பருவ மழை தொடங்கியதையொட்டி தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டியுள்ள மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் தெற்கு அரபிக் கடல், வங்க கடலில் அதிக காற்று வீசி வருவதால் கடலோர மாவட்டமான ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காணப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடல் காற்றின் தாக்கம் அதிகமாக உள்ளதால் தொண்டி, பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம், தனுஷ்கோடி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களாக தனுஷ்கோடி […]

thanushkodi 3 Min Read
Default Image

கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!

வங்கதேசம் அருகே கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக கடல் பகுதியில் காற்று பலமாக வீசுவதோடு கடல் சீற்றமாக காணப்படும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..! 1 Min Read
Default Image

நாகையில் 1-ம் எண் புயல் ஏற்றம் ! மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூரில் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது. டெல்டா மாவட்டங்களில் வீசும் சூறை காற்றில் தஞ்சை நகரில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. திருவையாறு பகுதிகளில் வாழை மரங்கள் முறிந்து சேதமாகி உள்ளன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கடந்த 2 நாட்களாக தஞ்சை, நாகை, திருவாரூரில் ஒருசில இடங்களில் மட்டும் மழை பெய்தது. நேற்று வழக்கம் போல் வெயில் சுட்டெரித்தது. அதேநேரத்தில் அனைத்து இடங்களிலும் பலத்த சூறை காற்று […]

நாகையில் 1-ம் எண் புயல் ஏற்றம் ! மீனவர்களுக்கு எச்சரிக்கை..! 4 Min Read
Default Image

Breaking News: உத்தரபிரதேசத்தில் புழுதிப்புயல்,கனமழை ! 26 பேர் உயிரிழப்பு..!

உத்தரபிரதேசம் மாநிலத்தின் 11 மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்றிரவு புழுதிப் புயல் மற்றும் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், சில மாவட்டங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகள் வெள்ளக் காடாக காட்சி அளிக்கின்றன. மழை, வெள்ளம் மற்றும் மின்னல் தாக்குதல் சார்ந்த விபத்துகளில் கடந்த 24 மணி நேரத்தில் 26 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. ஜாவ்ன்பூர் மற்றும் சுல்தான்பூர் மாவட்டங்களில் தலா 5 பேரும், உன்னாவ் மாவட்டத்தில் 4 பேரும், சன்டவுலி மற்றும் […]

Breaking News: உத்தரபிரதேசத்தில் புழுதிப்புயல் 3 Min Read
Default Image

இடி, மின்னலுடன் கனமழை! டெல்லியில் இயல்பு வாழ்க்கை ,விமான சேவைகள் முடக்கம்..!

டெல்லியில் உள்ள மக்களை கோடைக்கால வெயிலின் தாக்கம் கடந்த 15 நாட்களாக வறுத்து எடுத்து வருகின்றது. இந்நிலையில், இன்று மாலை சுமார் 5 மணியளவில் வானத்தில் கருமேக கூட்டம் திரண்டு பல பகுதிகளை இருளாக்கியது. மேலும், பலத்த சூறைக்காற்றுடன் புழுதிப் புயலும் தாக்கியதால் இதை எதிர்பாராத வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். குறிப்பாக, டெல்லியின் முக்கிய பகுதிகளான அக்பர் ரோடு, துவாரகா, ஆர்.கே.புரம் மற்றும் சத்தர்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மாலை வேளையில் முகப்பு விளக்குகள் ஒளிர […]

flightsdiverted 3 Min Read
Default Image

தென்மேற்கு பருவ மழை: அடுத்த 2- நாட்களில் தென் தமிழகப் பகுதிகளில் தொடங்க வாய்ப்பு..!! வானிலை ஆய்வு மையம்..!!

அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் தொடங்கிய தென்மேற்கு பருவ மழை அடுத்த இரண்டு நாட்களில் தென் தமிழகப் பகுதிகளில் தொடங்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகம், புதுவையின் ஒரு சில இடங்களில் இடியுடன் மழைக்கும்,  ஓரிரு இடங்களில் இடியுடன் கனமழைக்கும் வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் […]

தென்மேற்கு பருவ மழை அடுத்த 2- நாட்களில் தென் தமிழகப் பகுதிகளில் தொடங்க வாய 2 Min Read
Default Image

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு : தென் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு..!

சென்னை வானிலை ஆய்வு மையம், தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக  தெரிவித்துள்ளது. மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டியுள்ள குமரிக்கடல் கடற்பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிக்கிறது. இதனால் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  சென்னையை பொறுத்தவரை அதிகபட்சமாக 36 […]

#Chennai 3 Min Read
Default Image

மார்ச் 23ம் தேதி-உலக வானிலை தினம்…!!

வானிலையை சீராக வைப்பதற்கு உரிய வழிமுறைகள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலக வானிலை தினம் மார்ச் 23ம் தேதி கொண்டாடப்படுகிறது. “வாழ்க்கையையும் பொருட்களையும் பாதுகாக்க வானிலையை கண்காணிப்போம்’ என்பது இந்தாண்டு இதன் மையக்கருத்தாக உள்ளது. தற்போதைய காலநிலை மாற்றம் மற்றும் வெப்பமயமாதலால் மனிதர்கள் மட்டுமின்றி,மற்ற உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது இன்றைய தலைமுறைக்கு, சவாலாக திகழ்கிறது… தொழிற்சாலைகள் வெளியிடும் கார்பன்-டை-ஆக்சைடின் அளவு அதிகரிப்பதால், சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. ஓசோன் பாதிப்புக்குள்ளாகி, பூமியில் வெப்பம் அதிகரிக்கிறது இதில் வளரும் […]

#Weather 4 Min Read
Default Image

கோவில்பட்டியில் பலத்த இடி, மின்னலுடன் மழை…!!

  கோவில்பட்டி பகுதியில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து வந்தது. இன்று காலையில் பலத்த வெயில் அடித்தாலும், மதியத்திற்கு மேலாக வானம் மேகமூட்டத்துடன் இருள் சூழ்ந்து காணப்பட்டது. தொடர்ந்து பலத்த இடி,மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.தொடர்ந்து சுமார் 1மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்ததது. இந்த மழையினால் கோவில்பட்டி புதுரோடு, மார்க்கெட் சாலைகளில் மழைநீர் வெள்ளபோன்று போனதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகினர்.

#Thoothukudi 2 Min Read
Default Image

வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி வடக்கு மற்றும் தென்தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு…!!

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் கர்நாடகத்தை ஒட்டி வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. வடக்கு மற்றும் தென்தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் ஓரிரு முறை இடைவெளி விட்டு மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் அறிவிப்பு செய்துள்ளது.

#rains 1 Min Read
Default Image

வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை! வெப்பநிலை வழக்கத்தைவிட அதிகமாக இருக்கும்…..

வானிலை ஆய்வு மையம், டெல்லி, அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்  வரும் கோடைக்காலத்தில் வழக்கத்தைவிட வெப்பநிலை ஒன்றரை டிகிரி செல்சியல் அதிகமாக இருக்கும் என  தெரிவித்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் தென்பட்ட அறிகுறிகளின் அடிப்படையில் மார்ச் முதல் மே வரையிலான கோடைக்காலத்தில் வெப்பநிலை எப்படி இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி டெல்லி, அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வழக்கமாகக் கோடைக்காலங்களில் இருந்ததைவிட இந்த ஆண்டு வெப்பநிலை ஒன்றரை டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் […]

#Weather 3 Min Read
Default Image

இன்றைய நாளின் முக்கிய தகவல்கள் இதோ…!!

இன்றைய நாளின் தங்க விலை : கிராம் ஒன்றிற்கு ரூ2,909 காசுகள். இன்றைய நாளின் வெள்ளி விலை : கிராம் ஒன்றிற்கு ரூ.41.40 காசுகள். பெட்ரோல் விலை : லிட்டருக்கு ரூ.74.25 காசுகள். டீசல் விலை : லிட்டருக்கு ரூ. 65.58 காசுகள். இன்றைய நாளின் வெப்பநிலை நிலவரம் சென்னை :அதிகபட்சமாக 32°C, குறைந்தபட்சமாக 24°C திருச்சி : அதிகபட்சமாக 34°C, குறைந்தபட்சமாக 25°C. மதுரை : அதிகபட்சமாக 36°C, குறைந்தபட்சமாக 23°C. கோவை : அதிகபட்சமாக […]

#Weather 1 Min Read
Default Image

ஆசிய நாடுகளில் வழக்கத்திற்கு மாறாக பனிப்பொழிவு!

ஐரோப்பிய நாடுகள் மட்டுமின்றி, ஆசிய நாடுகளிலும் பருவநிலை மாற்றத்தால்  வழக்கத்திற்கு மாறாக இந்தாண்டு அதிகளவில் பனிப்பொழிவு காணப்படுகிறது. பனிப்பொழிவு மற்றும் மூடுபனி காரணமாக பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள ஈஃபில் கோபுரத்திற்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சாலைகளில் பனிபடர்ந்து காணப்படுவதால் வாகனங்களை மெதுவாக இயக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.சாலைகள் மற்றும் தெருக்களில் கொட்டிக் கிடக்கும் பனியை ஒருவர் மீது மற்றொருவர் எரிந்து விளையாடி பொழுதைக் கழித்து வருகின்றனர். ரஷ்யாவில் பனிப்பொழிவு காரணமாக வாகனங்களை இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாஸ்கோவில் சாலையில் […]

#China 3 Min Read
Default Image

டெல்லியில் கடும் பனி மூட்டத்தால் 29 ரயில் சேவைகள் ரத்து!

டெல்லியில் இன்று காலை 13 டிகிரி செல்சியஸ் அளவிற்கு கடும் பனி மூட்டம்,இதன்  காரணமாக 29 ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கடும் குளிரான சீதோஷ்ண நிலை நிலவியது. அடர் பனி காரணமாக, காற்று மாசுவும் 168 முதல் 183 புள்ளிகளாக உள்ளது. பனிமூட்டம் மற்றும் காற்று மாசு காரணமாக, எதிரில் வரும் வாகனங்கள் சரியாக தெரியாத அளவிற்கு, சூழல் நிலவுகிறது. குறைந்த வெளிச்சம் காரணமாக, 26 ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 32 ரயில்கள் காலதாமதமாக இயக்கப்படுகின்றன. […]

#Delhi 2 Min Read
Default Image

மூன்று நிகழ்வுகள் !ஒரே நாளில் …150 ஆண்டுகளுக்கு பிறகு அதிசயம் ….

சுமார் 150 ஆண்டுகளுக்கு பிறகு,முழு சந்திர கிரகணத்தின் போது, 3 அரிய நிகழ்வுகள் ஒரே நாளில் நடைப்பெறப் போகிறது இந்த  அரிய நிகழ்வு. வானில் சூரியன், நிலா, பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் வருகையில் முழு சந்திர கிரகணம் நாளை ஏற்படுகிறது. அப்போது, நிலா நீல நிறத்தில் காட்சியளிக்கும் அரிய நிகழ்வு நாளை நடக்கிறது. நிலா தோன்றும் நேரத்திலேயே முழு சந்திர கிரகணம் தோன்றுவது இதன் சிறப்பு. நாளை மாலை 6.25 முதல் இரவு 7.25 வரை […]

india 3 Min Read
Default Image

சென்னை முழுவதும் கடும் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் அவதி, விமான சேவை பாதிப்பு …!!

சென்னை முழுவதும் கடும் பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் அவதி வாகனங்களில் முகப்பு விளக்கை எரியவிட்டபடி வாகன ஓட்டிகள் செல்கின்றனர். மேலும் இந்த கடும் பனிமூட்டம் காரணமாக சென்னையில் விமான சேவை பாதிப்பு அடைந்துள்ளது.மொரீசியஸ், கோலாலம்பூர், கொச்சி விமானங்கள் பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.  

#Chennai 1 Min Read
Default Image

2017 ஆம் ஆண்டுக்கு முக்கிய இடம் !மக்களை ஆட்டிப்படைத்த வருடங்களில் இணைந்தது ….

தொழிற்புரட்சிக்கு முந்தைய காலத்தின் வெப்பநிலையை அடிப்படையாக வைத்து உலகின் சராசரி வெப்பநிலை கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் 2017ஆம் ஆண்டில் சராசரியைவிட ஒன்று புள்ளி ஒன்று டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகமாகப் பதிவாகியுள்ளது. இதன்மூலம் அதிக வெப்பமிக்க 3 ஆண்டுகளில் ஒன்றாக 2017ஆம் ஆண்டு இடம்பிடித்துள்ளது. 2016ஆம் ஆண்டுதான் உலகிலேயே மிக வெப்பமான ஆண்டாகும். இதையடுத்து அதிக வெப்பமிக்க ஆண்டுகளாக 2015, 2017ஆகிய ஆண்டுகள் உள்ளன. 19ஆம் நூற்றாண்டில் இருந்து கணக்கிடப்பட்ட அதிக வெப்பமிக்க 18ஆண்டுகளில் இரண்டாயிரமாவது ஆண்டுக்குப் […]

#Weather 2 Min Read
Default Image

தென் தமிழகத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!

தென் தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது … கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு என்றும் சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறியுள்ளது. அதிகபட்சமாக நாகை மாவட்டம் கொள்ளிடத்தில் 10 செ.மீ., சீர்காழியில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.. source: dinasuvadu.com

#Kanyakumari 2 Min Read
Default Image