TN rain [File Image]
சென்னை : தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்னும் வரும் மே 18,19, ஆகிய தேதிகளில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதன் காரணத்தால் கனமழைக்கான ரெட் அலர்ட் இந்திய வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ளது. அதைப்போல, இன்று 7 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
(மே 16) தமிழகத்தின் நீலகிரி, தேனி, திண்டுக்கல், கோவை, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருப்பூர், ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.
மே 18 தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும், மே 11 கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மே17 முதல் 19 வரை மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 16 மற்றும் 20 ஆம் தேதிகளில் தமிழகத்திலும், மே 20 -ஆம் தேதி கேரளாவிலும் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது எனவும் இந்திய வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது.
நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…
சென்னை : நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கையில், ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருந்த சென்னை…
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…