டெல்டா மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலெர்ட் – வானிலை ஆய்வு மையம்!
தமிழகத்தில் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துளளது.
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழக்தில் ஒரு சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், நேற்று இந்திய பெருங்கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்து. அது மேலும், நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் தெரிவித்திருந்தனர்.
இதனால், தமிழகத்தில் குறிப்பாக டெல்டா மாவட்டங்களுக்கு கனமழை பெய்யும் என ஆரஞ்சு அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால், வரும் நவம்பர் 26ம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து வரும் நவம்பர் 27ம் தேதி கடலூர், புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இதனால் நாளை முதல் தமிழகத்தில் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.