விடைபெற்றது வடகிழக்கு பருவமழை – இந்திய வானிலை ஆய்வு மையம்!
வடகிழக்கு பருவமழை தென்னிந்திய பகுதிகளில் இருந்து விடைபெற்றது என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். இந்த முற வடகிழக்கு பருவமழையின் தாக்கம் ஜனவரி இறுதி வரை தொடர்ந்து நீட்டித்தது. தமிழகத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 15ம் தேதி தொடங்கிய வடகிழக்குப் பருவ மழை விலகியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வடகிழக்கு பருவமழை விலகியது. கடந்த ஆண்டு அக்.15ம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் 3 மாதங்களாக நீடித்து வந்து இன்றுடன் விலகியதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை 100 நாட்கள் பெய்த நிலையில், இயல்பை விட 33% அதிகமாக பெய்துள்ளது. முன்னதாக 2005 ஆம் ஆண்டில் 97 நாட்கள் நீடித்தது குறிப்படிதக்கது. தற்போது பனிக்காலம் காரணமாக பலரும் குளிரில் வாடி வரும் நிலையில் பிப்ரவரி இறுதிக்கு மேல் வெயில் காலம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
100 நாட்களுக்கு மேல் நீடித்த வடகிழக்குப் பருவமழை இன்று விலகுகிறது.#NorthEastMonsoon pic.twitter.com/lxUk1s8v9d
— Satheesh lakshmanan 🖋சதீஷ் லெட்சுமணன் (@Saislakshmanan) January 27, 2025