வடகிழக்கு பருவமழை தொடக்கம்! மீனவர்களுக்கு எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்!
மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் 15,16,17,18,19 ஆகிய தேதிகளில் கடலுக்கு செல்வதை தவிர்க்கவேண்டும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை : தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து நிறைவு பெற்று, வடகிழக்கு பருவ மழை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தொடங்கியுள்ளது எனவும், இந்த ஆண்டு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிக தீவிரமாக உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.
இந்நிலையில், வானிலை தொடர்பான தகவல் குறித்த அறிவிப்பை பற்றி சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பாக, மீனவர்களுக்கான எச்சரிக்கை குறித்த தகவலும் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி,…
தமிழக கடலோரப்பகுதிகள்
15, -ஆம் தேதி தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
16.10.2024 முதல் 18.10.2024 வரை; வடதமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும், தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
19-ஆம் தேதி : தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் மேற்கண்ட தேதிகளில் கடலுக்கு செல்வதை தவிர்க்கவேண்டும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.