நீலகிரி – கோவையில் இன்று கனமழை கொட்டும் – வானிலை ஆய்வு மையம்!

தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
அந்த வகையில், இன்று நீலகிரி, கோவை ஆகிய 2 மாவட்டங்களில் கனமழையும், மற்ற மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை. மன்னார் வளைகுடா, தென் தமிழகம், ஆந்திர கடலோரம், குமரிக்கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளது.
சென்னை நிலவரம்:
அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
வங்கக்கடல் பகுதிகள்:
தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகள், தெற்கு இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
லேட்டஸ்ட் செய்திகள்
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025
சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா, நியூசிலாந்து! வெளியேறிய பாக், வங்.,அணிகள்.!
February 25, 2025
NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025