வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி குறித்த புதிய அப்டேட்.!
வானிலை ஆய்வு மையம் : மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று (18.07.2024) காலை 8.30 மணியளவில் உருவாகியுள்ளது. இது அடுத்த 2 தினங்களில் சற்று வலுப்பெற்று ஒரிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என கூறப்பட்டது.
இன்று வங்கக்கடலில் நிலவிய அந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. தற்போது, வலுப்பெற் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதிவடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவி வருகிறது.
அடுத்த 12 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை (ஜூலை 20) ஒடிசாவில் கரையைக் கடக்க வாய்ப்பு என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிதித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது உள்ளது இரு சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.