மாறும் வானிலை…மக்களுக்கு ஜில் நியூஸ்.! வெயில்-மழை பற்றிய நியூ அப்டேட்!
Weather Update: கடந்த 2 வாரமாக வெயில் வெளுத்து வாங்கி வரும் நிலையில் அடுத்த 5 நாளுக்கு வெப்பநிலை 2 டிகிரி – 5 டிகிரி செல்சியஸ் வரை குறையும் என மக்களுக்கு நிம்மதியான செய்தியை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணாமாக இன்றைய தினம் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ஆனால், நாளை மற்றும் நாளை மறுநாள் தென் தமிழகம், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை தென் தமிழகம், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். இதனால், வெயிலின் தாக்கம் வெகுவாக குறைய வாய்ப்புள்ளது.