டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்? முன்னெச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வாளர்.!
டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் கொடுக்கப்படும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தற்போது வலுவடைந்துள்ளது.மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது.
இதன் காரணமாக, காவிரி டெல்டா மாவட்டங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்படும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், “டெல்டா மாவட்டங்களில் இன்று மாலை அல்லது இரவு முதல் மழை அளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று இரவு முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
26 மற்றும் 27 ஆம் தேதிகளில் தீவிர மழைக்கு வாய்ப்புள்ளது. நாகை, திருவாரூர், காரைக்கால், தஞ்சை, மயிலாடுதுறை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் மிக கனமழை பெய்யும் என்றும், 26 ஆம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
டெல்டா மாவட்டங்களுக்கு விரைவில் IMD மூலம் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் ரெட் அலர்ட் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது” என குறிப்பிட்டுள்ளார்.
Delta belt is going to see rains starting from Monday 25th night and have to be watchful for 26 and 27th for extreme rains.
—————-
Nagai, Tiruvarur, Karaikkal, Thanjvur, Mayiladuthurai and Cuddalore all needs to watchful on 26 and 27th for very heavy rains and there is… pic.twitter.com/QYIScJkEBy— Tamil Nadu Weatherman (@praddy06) November 25, 2024