25 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.! வானிலை ஆய்வு மையம் தகவல்.!
தமிழ்நாட்டில் இன்று 25 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டல சுழற்சி ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நெல்லை மற்றும் கன்னியாகுமரி பகுதியில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தேனி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், வேலூர், நாமக்கல், தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், நாகை ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும்,
திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசியில் ஓரிரு இடங்களில் நாளையும் கனமழை பெய்யும் என்றும், நாளையும் நெல்லை, குமரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி சேலம், நாமக்கல், கரூர், தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.