வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்.!
தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை : வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், அதற்கான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு முன்னெடுத்து வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில மாவட்டங்களில் கனமழையும், ஒரு சில மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்து வருகிறது.
இந்த நிலையில், லட்சதீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று 17-மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.
சென்னை நிலவரம்
அடுத்த 24மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.என தெரிவிப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
இன்றைய தினம் மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்:
இன்றைய தினம் மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு, வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இந்நிலையில், மேற்குறிப்பிட்டபடி, அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.