ஆரஞ்சு அலர்ட்! இந்த 3 மாவட்டத்துக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு!

heavy rain tamil nadu

சென்னை : தமிழகத்தின் 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் கொடுத்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், (மே 15) 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது. குமாரி கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல  சுழற்சி காரணமாக (மே 15) தேனி, விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. இந்த 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு  வாய்ப்பு இருப்பதன் காரணமாக சென்னை வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட்  கொடுத்துள்ளது.

அதைப்போல, வரும் மே 18-ஆம் தேதி தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனவும், மே 19-ஆம் தேதி தேனி, தென்காசி, நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்