அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை : தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் (காலை 10 மணி வரை) 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
அதன்படி, சென்னை, மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, தஞ்சை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கோவை மற்றும் திருப்பூர் ஆகிய 13 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) October 21, 2024