மக்களே கவனம்!! தமிழகத்தில் வெப்ப அலை வீசும்…மஞ்சள் எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!
Weather Update: தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு வெப்ப அலை அதிகரித்து காணப்படும்.
தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும் என இந்திய வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகம், கர்நாடகாவின் உள் மாவட்டங்கள், ஒடிசா, உ.பி, பிகார் மாநிலங்களுக்கு மஞ்சள் அலர்ட் மற்றும் மேற்கு வங்கத்திற்கு அதிக வெப்ப அலைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இந்தியாவிலேயே அதிகப்பட்ச வெப்பநிலை பதிவான மாவட்டங்களில் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. அதிகபட்சமாக ஒடிசாவின் புவனேஸ்வர், ஆந்திராவின் கடப்பாவில் 111 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
அதற்கு அடுத்தப்படியாக ஈரோட்டில் 109 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், வெயிலால் உடல்நிலை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கவும், பிற்பகல் நேரத்தில் வெயில் அதிகளவில் இருக்கும் என்பதால், குழந்தைகள், முதியோர் வெளியே வர வேண்டாம் என எச்சரித்துள்ளது.