மக்களே உஷார்!! 15 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுத்த வானிலை மையம்.!

heat wave

TN Yellow Alert: தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களுக்கு வானிலை மையம் வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது.

கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகரித்து வருவதால் தமிழ்நாட்டுக்கு மஞ்சள் எச்சரிக்கை, மேற்குவங்கத்துக்கு சிவப்பு எச்சரிக்கை, ஒடிசாவிற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.

இந்தியாவிலேயே அதிகப்பட்ச வெப்பநிலை பதிவான மாவட்டங்களில் தமிழ்நாட்டின்சேலம் மாவட்டம் 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஈரோடு, சேலம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திருப்பூர், காஞ்சிபுறம் ஆகிய மாவட்டங்களில் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே, மதியம் 12 மணி முதல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் எனவும், உடல்நலக்குறைவு ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுக வேண்டும் என ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்ப பற்றிய முன்னெச்சரிக்கை:

அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் ஒருசில இடங்களில் இயல்பை விட 3°-5° செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒருசில இடங்களில் 39-42° செல்சியஸ். இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 35°-38° செல்சியஸ் இருக்கக்கூடும்.

சென்னை நிலவரம்

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்