தமிழகத்துக்கு மிக கனமழை வாய்ப்பு… ஆரஞ்சு எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்!!

வானிலை : தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்திருக்கும் நிலையில், பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக அங்கு வெள்ளம் ஏற்பட்டது. இன்று அங்கு கனமழை பெய்து வரும் நிலையில், இன்று தமிழகத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று தெற்கு ‘சத்தீஸ்கர்’ மற்றும் அதனை ஒட்டிய விதர்பா நில பகுதிகளில் நிலவுகிறது. அதனை தொடர்ந்து ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஜூலை 19-ஆம் தேதி உருவாக வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் , நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும்; கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்; திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் இன்று (ஜூலை-17) ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம்
‘ஆரஞ்சு எச்சரிக்கை’ கொடுத்துள்ளது. அதே சமயம், இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
சென்னையில் கால்பந்து போட்டி.., போக்குவரத்து மாற்றம்.! ரூட்டை பார்த்து தெரிஞ்சிக்கோங்க…
March 29, 2025
தனக்குத்தானே எக்ஸ் தளத்தை வியாபாரம் செய்த எலான் மஸ்க்.! வாங்குனது எவ்வளவு? விற்றது எவ்வளவு?
March 29, 2025