டெல்லியில் வெப்ப அலை வீசும்.. வானிலை ஆய்வு மையம்.!
டெல்லி : வட இந்தியாவில் எப்போதும் இல்லாத அளவில், நேற்றைய தினம், 50 டிகிரி செல்சியஸை கடந்து வெப்பம் பதிவாகியுள்ளது. சில மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இன்று (மே 30ஆம் தேதி) ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், சில பகுதிகளில் வெப்பநிலை அதிகரிக்கும் என்றும் உள்ளூர் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், லேசான முதல் மீதமான மழையுடன், இடியுடன் கூடிய காற்று (மணிக்கு 25-35 கிமீ வேகம்) வீச வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளது.
ஜூன் 1 வரை மேகமூட்டமான வானிலை நீடிக்கும் என்றும், ஜூன் 4 வரை மழைக்கு வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, வெப்பநிலைக்கான எச்சரிக்கையை ‘சிவப்பு’லிருந்து வாபஸ் பெற்று ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் வெப்பநிலையானது 2°C முதல் 3°C வரை குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 45°C வரை இருக்க கூடும் என கணித்துள்ளது. டெல்லியில் நேற்று முன்தினம் 126 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதுதான் நடப்பு ஆண்டின் அதிகபட்ச வெப்பநிலை என்றும் கூறப்பட்டது.