சென்னைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம்… படிப்படியாக வலுவிழக்க வாய்ப்பு!
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கிமீ வேகத்தில் கிழக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து வருகிறது.
சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில், சென்னைக்கு கிழக்கு – வடகிழக்கே சுமார் 450 கி.மீ-இல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.
மேலும், வங்கக் கடலில் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கி.மீ., வேகத்தில் அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த தாழ்வு மண்டலம் மெதுவாக கிழக்கு – வடகிழக்கு நோக்கி நகர்ந்து, அடுத்த 12 மணி நேரத்திற்கு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதன் தீவிரத்தை தக்கவைத்து, அதன் பிறகு கடலில் படிப்படியாக வலுவிழக்க வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The depression over westcentral Bay of Bengal off Andhra Pradesh coast moved east-northeastwards with the speed of 7 kmph during past 6 hours and lay centred at 0530 hrs IST of 21st December 2024 over the same region, near latitude 13.9°N and longitude 84.2°E, about 450 km… pic.twitter.com/YoXswFUS5z
— India Meteorological Department (@Indiametdept) December 21, 2024
இதனால், தமிழகத்திற்கு மழை பெய்யுமா? என்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. அந்த தாழ்வு மண்டலம் வலுவிழக்கும் பொழுது, வானிலையில் ஏதேனும் மாற்றம் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.