தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. 7 நாட்களுக்கு கனமழை!
தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு (நவ.18ம் தேதி வரை) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு நோக்கி நகர்ந்து தற்போது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய மேற்கு வளைகுடாவை ஒட்டி வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டியு நிலவி வருகிறது.
இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்களுக்கு (நவ.18ம் தேதி வரை) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதனிடையே, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, அடையாறு, அண்ணா சாலை, எழும்பூர், புதுப்பேட்டை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, திருவான்மியூர் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில்அதிகாலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இன்று அதிகாலையிலிருந்து சென்னையில் சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, இன்று சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.