தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்களின் லிஸ்ட்!
தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களின் லிஸ்டை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
சென்னை: வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வேகமாக நகர்ந்து வருகிறது. இது தொடர்ந்து வடக்கு – வடமேற்கு நோக்கி நகர்ந்து மேலும் தீவிரமடைந்து இன்று (நவம்பர் 27ஆம் தேதி) சூறாவளி புயலாக மாற வாய்ப்புள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்களின் லிஸ்டை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாடு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்றும் நீலகிரி, கோவை, கள்ளக்குறிச்சி, திருச்சி, தென்காசி, விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றும் அறிவித்துள்ளது.