தாமதமாக உருவெடுக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! நாளை முதல் மழை என்ட்ரி…
குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆம், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, நேற்று (10-11-2024) காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவியது.
இதன் காரணமாக, அடுத்த 36 மணி நேரத்தில் நேரத்தில் உருவாகுக் கூடும். இது அதற்கடுத்த இருதினக்களில் மேற்கு திசையில், தமிழக இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும். இதனால், தமிழ்நாட்டில் சில இடங்களில் 7 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
மேலும், காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானதும் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் வடகிழக்கு பருவமழை
நாளை (நவம்பர் 12) முதல் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையத் தொடங்கும். பருவமழை தீவிரம் அடையும். 12ம் தேதி முதல் நல்ல மழை பெய்யும் வாரம் என வேதர் மென் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
ஏற்கனவே, தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.