குடை முக்கியம்!! இந்த 20 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்யும்!
தமிழகத்தில் காலை 10 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்கிற பட்டியலை வானிலை ஆய்வு மையம் வெளிட்டுள்ளது.
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
சென்னையில் நேற்றிரவு முதல் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த மூன்று மணி வரை (காலை 10 மணி வரை) எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்கிற பட்டியலை வெளிட்டுள்ளது.
அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், திருச்சி, ராமநாதபுரம் ஆகிய 20 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனால், பள்ளிக்கு மற்றும் அலுவலகம் செல்வோர் குடையை எடுத்து சொல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.