அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த மாவட்டங்களில் மழை பெய்யும்!
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி 7 மாவட்டங்களில் மாலை 7 மணி மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட்டியலின் படி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கோயம்புத்தூர், நீலகிரி, திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.