சென்னை: மே 22இல் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மண்டலம் அறிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் தென் இந்திய மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் தற்போது மிதமானது முதல் அதிகனமழை வரையில் பெய்து வருகிறது. மழை நிலவரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் தமிழக வானிலை ஆய்வு மைய அவ்வப்போது மழை குறித்த அப்டேட்களை அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகின்றனர்.
தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, தென்மேற்கு பருவமழை நாளை (மே 19) தெற்கு அந்தமான் கடல் பகுதியிலும், தென்கிழக்கு வங்காள விரிகுடாவின் சில பகுதிகள் மற்றும் நிக்கோபார் தீவுகளிலும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், தென்மேற்கு வங்கக் கடலில் மே 22ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்றும், அது, வடகிழக்கு திசையில் நகர்ந்து மே 24 ஆம் தேதி வங்கக் கடல் மத்திய பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுபெற வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.
அதே நேரத்தில், தமிழக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, கடந்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் 9 இடங்களில் கனமழையும், 3 இடங்களில் மிக கனமழையும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதி மற்றும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் தலா 17 செ.மீ மழை பெய்துள்ளது,
அடுத்த 24 மணி நேரத்தில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்றும், நாளை (மே 19) முதல் 21 ஆம் தேதி வரையில் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் வட உள்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும்,
நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 24 இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 5 நாட்கள் குமரிகடல், மன்னார் வளைகுடா, தென்மாவட்ட மற்றும் கேரள – கர்நாடக பகுதி கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசுவதால் அடுத்த 5 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை: பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், புற்றுநோய்க்காக அமெரிக்காவில் உள்ள மியாமி மருத்துவமனையில் அண்மையில் அறுவை சிகிச்சை செய்து…
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 500 அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ்…
நியூ ஆர்லியன்ஸ்: அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் நகரில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக கூடியிருந்த மக்கள் மீது, அதிவேகமாக வந்த கார் புகுந்து…
சென்னை: நடிப்பதை தாண்டி நடிகர் தனுஷ் இயக்குனராகவும் தடம் பதித்து வருகிறார். பா.பாண்டி, ராயன் படங்களை தொடர்ந்து, நிலவுக்கு என்…
துபாய்: விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் அடிக்கடி வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வதில் ஆர்வம் கொண்டவர்கள். மேலும் அவர்களது விடுமுறை…
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…