scorching sun [file image]
Tamilnadu Weather: தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்துள்ளது.
மேற்கு வங்கம், ஒடிசா மாநிலங்களில் 30ஆம் தேதி வரை தீவிர அனல் காற்று முதல் அதிதீவிர அனல் காற்றுவரை வீசுமென்று ரெட் அலர்ட் விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம்.
அதே போல், தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் 29ம் தேதி வரை வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
பகல் நேரத்தில் அதிகப்படியாக வெப்ப அலை வீசுவதால், குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர் பகல் 12-3 மணி வரை தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனிடையே, நேற்றைய தினம், தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்ததாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஈரோடு – 108°, திருப்பத்தூர் – 107°, சேலம் – 106°, தருமபுரி – 106°, கரூர் பரமத்தி – 106°, திருத்தணி – 105°, வேலூர் – 105°, திருச்சி – 104°, நாமக்கல் – 104°, கோவை – 103°, மதுரை விமான நிலையம் – 103°, மதுரை நகரம் – 102°, தஞ்சாவூர் – 102° பாளையங்கோட்டை – 100° ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…