தமிழகத்தில் வரும் 11,12-ஆம் தேதி ஆகிய தேதிகளில் கனமழை சூடுபிடிக்கும்.!
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதால், தமிழகத்தில் பரவலாக டிசம்பர் 11ம் தேதி முதல் மழை தொடரும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை: இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் இன்று (டிச.6) மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது, நாளை டிச.7-ம் தேதி வாக்கில், தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
மேலும் இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 12 -ம் தேதி வாக்கில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை- தமிழகம் கடற்கரையை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக டிச.11 மற்றும் 12ம் தேதிகளில் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, வருகின்ற (11-12-2024) மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள், காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், (12-12-2024) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.