கனமழை எதிரொலி! தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை..!

தூத்துக்குடியில் இடைவிடாது பெய்து வரும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்துள்ளனர்.

Thoothukudi Holiday

தூத்துக்குடி : தமிழகத்தில், கடந்த சில நாட்களாகவே டெல்டா, தென்மாவட்டங்களில் இருக்கும் இடங்களில் கனமழை விட்டுவிட்டு பெய்து வருகிறது. அதில், தென்மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

குறிப்பாக தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் நேற்று இரவு முதல் கனமழை கொட்டி தீர்த்தது. இடைவிடாது பெய்து வரும் கனமழையின் தீவிரத்தால் தூத்துக்குடியில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் (நவ-20, புதன்) மட்டும் விடுமுறை அறிவித்துள்ளனர்.

நேற்று முதல் மழை விட்டுவிட்டு பெய்த நிலையில், இரவு தொடங்கிய கனமழை நிற்காமல் தற்போது வரையில் பெய்து வருகிறது. இதன் காரணமாக மாணவர்களின் பாதுகாப்பு கருதி தூத்துக்குடியில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்றும் இதே போல கனமழை பெய்து வந்ததால், பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து, இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 15042025
Today Live 14042025
rohit sharma Anjum Chopra
Mamata Banerjee Yogi Adityanath
Meenakshi Thirukalyanam
Nainar Nagendran - Mk Stalin
adam zampa ipl
weather update rain to heat