வெளுத்து வாங்கும் கனமழை: கேரளாவில் ரெட் அலர்ட்…பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.!

Kerala rain

கேரளாவில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இந்நிலையில், கேரளாவின் இரண்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் அறிவித்துள்ளது.

ரெட் – ஆரஞ்சு அலர்ட்

அதன்படி, கண்ணூர் மற்றும் இடுக்கி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கேரளாவின் பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:

அது மட்டும்மல்ல… கனமழை காரணமாக எர்ணாகுளம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் உள்ள உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் அறிவுறுத்தல்:

கேரளாவில் நேற்று பெய்த கனமழையால் ஒரு சிறுமி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால், மக்கள் விழிப்புடன் இருக்கவும், ஆறுகளுக்கு அருகில் செல்வதையும், மலைப்பாங்கான பகுதிகளுக்குச் செல்வதையும், கடற்கரைக்குச் செல்வதையும் தவிர்க்குமாறு முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளார்.

ஐந்து நாட்கல் கனமழை எச்சரிக்கை:

வரும் ஐந்து நாட்களில் கேரளாவில் பல இடங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் 20 செ.மீ.க்கு மேல் மழை பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்