நாகை, மயிலாடுதுறையில் இன்று கனமழை வெளுக்கும்!
சென்னையில் நாளை மறு தினம் (நவ. 13) முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை : வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் நாளை (நவம்பர் 12) முதல் பருவமழை தீவிரம் அடைகிறது. இந்நிலையில், தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, இன்று (நவ.11) நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்காலின் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும், சென்னையில் நாளை மறு தினம் (நவ. 13) முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நாளை 9 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராம்நாட்டில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
பிற மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.