தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை கனமழை எச்சரிக்கை.!
சென்னை: தமிழகத்தில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் சற்று வெயில் குறைந்து மிதமான மழை கனமழை என வெயிலுக்கு குளிர்ச்சி தரும் வகையில் பெய்து கொண்டு இருக்கிறது. அதன்படி, இன்று காஞ்சிபுரம், சேலம், சிவகங்கை, பெரம்பலூர், தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் சூறைக் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (மே.15) இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கி.மீ முதல் 50 கி.மீ வரை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் நாளை திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சமீப நாட்களாக தமிழகத்தில் ஆங்காங்கே மழைப் பொழிவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை நிலவரம்
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37°
செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.