குடை எடுத்துக்கோங்க… இன்று 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் இன்று (நவ.17) 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக,தமிழ்நாட்டில் இன்று (நவ.17) 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழை பேய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
12 மாவட்டங்களில் கனமழை
மேலும், கடலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 12 மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை நிலவரம்
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.