கனமழை எச்சரிக்கை – 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு பேரிடர் மேலாண்மைத் துறை அவரச கடிதம்.!
சென்னை: கனமழை எச்சரிக்கையால், அனைத்துத் துறைகளும் தயார் நிலையில் இருக்க 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை உத்தரவிட்டுள்ளது.
இன்று முதல் 19ம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கனமழையை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகத்தின் அனைத்து துறைகளும் முழு வீச்சில் தயார் நிலையில்
இருக்க வேண்டும் என்று 26 மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஆணையர் அவசர கடிதம் அனுப்பியுள்ளது.
அதன்படி, அடுத்த 24 மணி நேரத்தில் தென்காசி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கன முதல் மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வருகின்ற மே-19 வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், சேதம் ஏற்படுவதை தவிர்க்க தேவையான நடவடிக்கை எடுக்கவும், அத்தியாவசிய நடவடிக்கைகளை உடனே துரிதப்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.