வானிலை

வெளுத்து வாங்க போகும் கனமழை: 3 நாட்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!

Published by
கெளதம்

தமிழ்நாட்டில் இன்றும், நாளை மற்றும் நாளை மறுநாள்  (செப்.,1ம் தேதி) என அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. மேலும், சென்னையில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவித்துள்ளது

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தகவல் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று (30.08.2023) கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம் மற்றும் திருச்சிராப்பள்ளி ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

மேலும், நாளை (31.08.2023) தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, சேலம், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, நீலகிரி ஆகிய 16 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதனையடுத்து, நாளை மறுநாள் (01.09.2023) கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி அகீட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

குட் பேட் அக்லி ‘சம்பவம்’.! AK வரார் வழிவிடு.., வெறித்தனமான ட்ரைலர் இதோ…

சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…

1 hour ago

LSG vs MI : கேப்டன் பாண்டியா சூழலில் சிக்கிய லக்னோ! மும்பைக்கு 204 டார்கெட் !

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…

2 hours ago

மீண்டும் CSK கேப்டனாகும் ‘தல’ தோனி? மைக் ஹஸி சூசக பதில்!

சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…

3 hours ago

கார் ரேஸில் பறக்கும் அஜித்.., பரபரக்கும் அட்டவணை ஏப்ரல் முதல் அக்டோபர் வரை…

சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…

3 hours ago

LSG vs MI : டாஸ் வென்ற மும்பை! பிளேயிங் 11-ல் ரோஹித் இருக்கிறாரா? பேட்டிங் தயாராகும் லக்னோ!

லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…

4 hours ago

“போராட்டம் எதற்கு என்று தெரியாத கட்சி தவெக” – அண்ணாமலை விமர்சனம்.!

சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…

5 hours ago