13 மாவட்டங்களில் இன்று கனமழை.. வடகிழக்கு பருவமழை அக்,15ம் தேதி தொடக்கம்.!
திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று இரவு விடிய விடிய பெய்த கனமழை பெய்ததன் காரணமாக, 32.1 செ.மீ அளவிற்கு மழை பதிவவாகியுள்ளது.
சென்னை : வடகிழக்கு பருவமழை அக்டோபர் 15ம் தேதியே தொடங்க இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், தமிழ்நாட்டில் அக்டோபர் 9ம் தேதி வரை கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு கனமழை வெளுத்து வாங்கியது. இதில், திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று இரவு விடிய விடிய பெய்த கனமழை பெய்ததன் காரணமாக, 32.1 செ.மீ அளவிற்கு மழை பதிவவாகியுள்ளது.
தமிழகத்தில் இன்று புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நீலகிரி, ஈரோடு, சேலம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
அடுத்த 3 மணி நேரத்திற்கு நீலகிரி, ஈரோடு, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.