மக்களே எச்சரிக்கை…இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் வெப்ப அலை வீசும்.!
Weather Update: தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்ப அலை வீவீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக வடதமிழகத்தின் இன்றும், நாளையும் வெப்ப அலைகள் வீசும் என இந்திய வானிலை மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சமவெளி பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை 3-5 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு அதிகமாக பதிவாகும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
எனவே, பொதுமக்கள் லேசான வெளிர் நிற பருத்தி ஆடைகளை அணியவும், தலையை மறைக்க துணி, தொப்பி அல்லது குடையைப் பயன்படுத்தவும். அதுமட்டுமல்ல, அடிக்கடி தண்ணீர், மோர், இளநீர் அருந்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னை நிலவரம்
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.